அந்த இரும்பு பெண்மணியா இப்படி ஒரு வீடியோ எடுக்க அனுமதித்தது ?

2017-12-22 11,581

ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற 75 நாட்களில் யாரும் அவரை சந்தித்தாக கூறவில்லை.

அதேபோல் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் புகைப்படங்கள் கூட வெளியிடப்படவில்லை. ஜெயலலிதாவை பார்க்க சசிகலா யாரையும் அனுமதிக்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக நேற்று முன்தினம் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சைப்பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
அதில் நைட்டி உடையில் உள்ள ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று உள்ளது. மேலும் முழங்கால் வரை கால்கள் தெரியும் அளவுக்கும் முதுகு தெரியுமாறும் ஜெயலலிதா கட்டிலில் அமர்ந்துள்ளார்.

TTV Dinakaran supporter Vetrivel released Video of Jayalalitha day before yesterday. He said Jayalalitha only asked Sasikala to take video of her. But Its unbelievable Jayalalitha alowed to take video in this get up. That video raises lots of questions and doubts.

Videos similaires