ஆர் கே நகர் இடைத் தேர்தலில் வாக்களிக்க ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டி வாக்களித்தனர்.
ஆர் கே நகருக்கு நேற்று வாக்குபதிவு நடைபெற்றது. திமுக சார்பில் மருது கணேஷ் அதிமுக சார்பில் மதுசூதனன் பிஜேபி சார்பில் கரு நாகராஜ் உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களும் சுயேட்சையாக டிடிவி தினகரன் மற்றும் 59 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை 8 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வாக்குபதிவு தொடங்கியதில் இருந்தே வாக்குபதிவு முடியும் வரை பெண் வாக்களாகர்களே வாக்களிப்பில் அதிக ஆர்வம் காட்டினர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை பெண்வாக்காளர்களை விட குறைவாகவே காணப்பட்டது. நேற்று ஒரு சில வாக்குசாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளறு ஏற்பட்ட காரணத்தினால் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் வாக்கு பதிவு எந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்ட பின் வாக்கு பதிவு நடைபெற்றது. தண்டையார் பேட்டையில் உள்ள ஒரு வாக்குசாவடியில் வாக்கு பதிவு எந்திரம் பழுதானதால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் வாக்குபதிவு எந்திரம் சரி செய்யப்பட்ட பின்னர் வாக்களிப்பு நடைபெற்றது. நேற்று நடைபெற்று முடிவு பெற்ற தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகமானோர் வாக்களித்துள்ளதால் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் குக்கர் சின்னம் பெண்களுக்கு மிகவும் பிடித்த சின்னமாகி விட்டாதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Des : Women voted more and more than men to vote in the RK Nagar interim election