அடுத்த எம்.எல்ஏ "ஆஃபர்" யாருக்கு...??- வீடியோ

2017-12-22 20,832

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதாவது 2011ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக மிகப் பெரிய அளவிலான வாக்குப்பதிவு நடந்துள்ளது. யாருக்கு மக்கள் வாக்குகளை போட்டுத் தள்ளியுள்ளனர் என்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா இங்கு 2 முறை ஜெயித்துள்ளார். அவரது திடீர் மறைவால் இங்கு இடைத் தேர்தல் வந்தது. அதிமுக சார்பில் மது சூதனன் போட்டியிட்டுள்ளார். திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிட்டுள்ளார். ஆனால் ஸ்டார் வேட்பாளர் என்றால் அது டிடிவி தினகரன்தான்.தினகரன் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளார். உதயசூரியனையும், இரட்டை இலையையும் மட்டுமே நம்பியுள்ளனர் இரு முக்கிய வேட்பாளர்களும். ஆனால் தினகரனுக்கோ அவரது முகமும், பெயரும் கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளன. அதை விட அவரது குக்கர் சின்னர் படு வேகமாக பாப்புலராகி விட்டது.இந்தத் தேர்தல் பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்த காரணத்தால் பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பதிவு நடந்தது. வாக்காளர்கள் காலையிலிருந்தே அலை அலையாக வந்து ஓட்டுப் போட்டனர்.இந்தத் தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 72.72 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் வெற்றிவேல் வெற்றி பெற்றார். அடுத்து 2016 தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது பதிவான வாக்குகள் 67.6 சதவீத வாக்குகள்தான்.ஆனால் இந்த முறை பெருமளவிலான வாக்குகள் பதிவாகியஉள்ளன. அதாவது 77 சதவீத வாக்குகள் அளவுக்குப் பதிவாகியுள்ளன. இது அதிக அளவிலானதாகும். குறிப்பாக பெண்கள் அதிகம் போட்டுள்ளனர்.இந்தத் தேர்தலின் பின்னணியில் ஏகப்பட்ட சர்ச்சைகள், புகார்கள், கொந்தளிப்புகள் நிலவின. தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு பின்னர்தான் நடந்தது. பணம் வரலாறு காணாத அளவுக்கு விளையாடியது. எனவே அதிக அளவிலான வாக்குப் பதிவைப் பார்த்தால் பெரும் சுவாரஸ்யமான எதிர்பார்ப்புதான் எழுகிறது.


Who will win RK Nagar?, this is a "Thousand Dollor" question now. The constituency went to the by poll yesterday and has registered 77% polling. It is the highest after 2011 assembly elections.

Videos similaires