ஆர்கே நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு- வீடியோ

2017-12-21 3,851

ஆர் கே நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குசாவடி மையங்களில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசாரும் துணை ராணுத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆர் கே நகர் தொகுதியில் உள்ள அணைத்து வாக்குசாவடிகளும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்கு பதிவில் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு சில வாக்கு சாவடிகளில் மின்னணு எந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் ஒருசில மணி நேரங்கள் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது. காலையில் இருந்தே வாக்காளர்கள் உற்சாகத்துடன் வாக்களித்தனர். வாக்களிக்க வந்த வாக்காளர்கள் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறிய போது பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற வில்லை என்று குற்றம் சாட்டினர். வாக்களிக்க வந்த ஒரு வாக்காளர் முக்கிய கட்சி ஒன்று வாக்கிற்கு பணம் தருவதாக கூறி தற்போது வரை தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Des : The RK Nagar constituency was held today. Police and deputy men were deployed in the security services to prevent incidents in the polling centers. The Election Commission announced that the polling stations in RK Nagar constituency were troubled. The CCTV cameras were installed in all voting booths and the election was held with strong security.

Videos similaires