தோணி அடித்த அந்த ஷாட்.... லோகேஷ் ராகுலை மிரள வைத்தது- வீடியோ

2017-12-21 20,258

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டி-20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள 'பாரப்பட்டி' மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியாக ஆடிய இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதில் டோணி அடித்த ஷாட் ஒன்று மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. எதிரில் நின்ற லோகேஷ் ராகுல் கொஞ்சம் சுதாரிக்காமல் இருந்திருந்தால் பெரிய அளவில் அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கும்.

நேற்று நடந்த டி-20 போட்டியில் டோணி மிகவும் அதிரடியாக ஆடினார். பினிஷிங் மன்னன் என்று பெயர் பெற்று இருக்கும் டோணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியின் இலக்கை 180ஆக உயர்த்தினார். இதன் மூலம் இந்திய பேட்டிங் ஆர்டரில் 4ம் இடத்தில் இறங்க எப்போதும் சிறந்த தேர்வு டோணிதான் என்பதை அவர் இன்னொருமுறை நிரூபித்து இருக்கிறார்.


First T20 match between India vs Srilanka held today in Barabati Stadium, Cuttack. Rohith Sharma will lead the team as captain.India bat first. India took 180 runs in 20 overs. Sri Lanka took 87 runs. India lead the series in 1-0 margin. Dhoni's bizarre shot in 1st t20 against Sri Lanka got viral in social media. Logesh Rahul talks about the shot and how he managed to escaped from the ball