2ஜி வழக்கில் வழக்கறிஞர்கள் என்ன வாதாடினார்கள் ? எப்படி தீர்ப்பு கிடைத்தது ?- வீடியோ

2017-12-21 260

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை குற்றமற்றவர்கள் என்று டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிடடுள்ளார். இந்த தீர்ப்புக்கு பின் பல முக்கிய நீதிமன்ற வாதங்கள் காரணமாக இருக்கிறது. குற்றச்சாட்டப்பட்ட ஆ. ராசா செய்த வாதம் இதில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வழக்கு குறித்து புத்தகம் எழுதிக் கொண்டு இருக்கும் ராசா, நீதிமன்றத்தில் பல முறை முக்கியமான வாதங்களை முன்வைத்தவர்.

அதேபோல் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த் பெஹுரா செய்த வாதமும் இந்த வழக்கில் மிக முக்கியமாக பாரக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஊழல் என்று பெயர் பெற்ற 2ஜி வழக்கு ஒன்றுமில்லாமல் போனதற்கு பின்பு இவர்களின் வாதம்
இந்த வழக்கில் ஆ.ராசா தொடர்ச்சியாக, 2ஜி மக்களில் நலனுக்காக கொண்டு வரப்பட்டது என்று வாதாடி வந்தார். நிறைய சிறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதனால் வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாக தொலைபேசி கட்டணம் வெகுவாக குறைந்தது என்று கூறினார். மேலும் இதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இந்த ஏலம் நடந்தது என்று வாதம் வைத்தார். மிக முக்கியமாக சிறிய நிறுவனங்களின் வளர்ச்சியால் பெரிய நிறுவனங்கள் இந்த ஊழல் குற்றச்சாட்டை உருவாக்கி இருக்கிறது என்று வாதம் வைத்தார்.

Defence Lawyers side played main role in 2G case verdict. Importantly Sanjay Chandra’s, R. Rasa, Swan Telecom, Kanimozhi defence did a main role in this case

Videos similaires