ஆர்கே நகர் வாக்கு சாவடியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாமலேயே ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரத்தை தினகரன் மிக சாமர்த்தியமாக மக்களுக்கு நினைவூட்டினார். ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகாரால் அது ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் தேதி மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணியினர் என போட்டியிடுகின்றனர்.
ஆர்கே நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சார்பில் பணப்பட்டுவாடா நடப்பதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. ரூ. 100 கோடி வரை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.
இந்த தேர்தலில் அதிமுக, தினகரன் அணியினர் மக்கள் செல்வாக்கு யாருக்கு என்பதை அறிந்து கொள்வதற்காக போட்டி போட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால் இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டார்.
TTV Dinakaran today visited polling booths. He also reminds cleverly about the Jayalalitha's treatment video.