2017 ல் கிரிக்கெட் உலகை கலக்கிய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்!- வீடியோ

2017-12-20 1,620

2017ல் கிரிக்கெட் உலகில் சில பேட்ஸ்மேன்கள் மிகவும் அபாரமாக விளையாடி இருக்கிறார்கள். இந்திய அணியில் தொடங்கி ஆஸ்திரேலிய அணி வரை ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் பேட்டிங் மூலம் கட்டிப்போட்டு உள்ளனர். இந்த வருடம் ஒவ்வொரு அணியிலும் நிறைய புது வீரர்கள் அறிமுகம் ஆனார்கள். ஆனால் எப்போதும் போல சில ஜாம்பவான் வீரர்கள்தான் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் உலகிற்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாகவே இருந்தது. இன்னும் சில வருடங்கள் போனால் சிறந்த வீரர்களின் பட்டியலில் அனைத்து இடங்களையும் இந்திய வீரர்களே பிடிக்க முடியும் என்று கூட கூறலாம்.

தென்னாபிரிக்க அணிக்கு இந்த வருடம் பெரிய சாதனையும், பெரிய சோதனையும் இல்லாமல் கடந்து போனது. ஆனாலும் அந்த அணியின் குவின்டன் டி காக் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை இவர் 16 செஞ்சுரிகள் அடித்துள்ளார். 2012ல் டி-20 போட்டியில் அறிமுகம் ஆன இவர் இந்த வருடம் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். இந்த வருடம் 19 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இவர் 956 ரன்கள் அடித்துள்ளார். இந்த வருடத்தின் படி இவரது ஸ்ட்ரைக் ரேட் 98.84 ஆகும். இந்த வருடம் தான் இவர் தனது அதிகபட்ச ரன்னான 168 ரன்களை அடித்தார்.

List of top 5 cricket batsman of 2017. Kohli tops in the list, Steve Smith gets second place. Rohith Sharma took second highest run next to Kohli. Joe Root and Quinton de Kock also took next places in the list.

Videos similaires