போலீஸ் வேடம் அணிந்து தேசிய நெடுஞ்சாலையில் சோதனை செய்வது பேல் காரை வழிமறித்து கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சின்னத்துரை என்பவர் சென்னை மண்ணடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த 12ம் தேதி ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். சின்னத்துரை பணத்துடன் தொண்டிக்கு செல்வதை கொள்ளையர்கள. அவரை பாலோஅப் செய்துள்ளனர். இதனிடையில் விக்கிரவாண்டி அருகே சின்னத்துரை சென்ற காரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. அதில் இருந்து போலீஸ் வேடம் அணிந்து இறங்கிய கொள்ளையர்கள் காரில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று கொள்ளை சம்பவத்தில் மூலையாக செயல்பட்ட இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காவல்துறை உடை லத்தி கைவிலங்கு சொகுசு கார் பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Des : Police searched and tested on the national highway and arrested the robbers who robbed the bale and arrested the police.