நீதித்துறையில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், நீதிபதிகள் இருபது பேர் மீது ஊழல் புகார் அளித்த கொல்கத்தா ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று விடுதலையானார். பதவியில் இருக்கும் நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது இவரின் வழக்கில் தான் முதல்முறை என்பதால், இந்திய அளவில் இவ்வழக்கு கவனம் பெற்றது.
உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற நீதிபதி கர்ணன் தனது பதவிக்காலம் முழுவதும் தனது தீர்ப்பினாலும், செயல்பாடுகளாலும், பேச்சுகளாலும் சர்ச்சைக்குரிய நபராகவே இருந்து வந்துள்ளார். இதற்கு முக்கியமான காரணம் மனதில் பட்டதை தைரியமாகவும், ஒளிவு மறைவுமின்றி பேசும் அவரின் சுபாவம் என்று கூறப்படுகிறது.
2009ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கர்ணன், ஆரம்பம் முதலே பல விதமான சாதிய ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வந்ததாக பரபரப்பு புகார் அளித்தார். அப்போதைய தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியின் வார்த்தைகளையும் மீறி அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தான் தலித் என்பதால் சக நீதிபதிகள் தம்மை மோசமாக நடத்துவதாக பகிரங்க புகார் அளித்தார்.
Karnan was arrested in June 2017 after he was charged with contempt for accusing 20 judges of corruption without providing any evidence. After serving 6 months sentence he has been released today. His wife saraswathi karnan has come to kolkatta to receive karnan. Karnan, who had enrolled as an advocate with the Bar Council of Tamil Nadu in 1983, was appointed a judge of the Madras High Court in 2009. He was transferred to the Calcutta High Court on March 11, 2016. He was transferred from the Madras High court for his repeated allegations against and run-ins with the cheif justice and fellow judges of the court. As he was released now whole judicial department is eagerly waiting for his next action.