ஆர்கே நகருக்கு கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அவரது சவப்பெட்டி மாதிரியும், இந்த முறை ஜூஸ் குடிக்கும் வீடியோவும் தற்போது அதகளப்படுத்தப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு பின்னர் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு போன்ற உடல்நல பாதிப்புகளால் கடந்த ஆண்டு செப்.22-ஆம் தேதி ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த பொதுமக்களும், தொண்டர்களும் அப்பல்லோ வாசலில் குவிந்தனர். எனினும் ஜெயலலிதாவுக்கு ஒன்றும் இல்லை என்ற அறிக்கைகளே வெளியாகிவந்தன.
எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது அவரது புகைப்படம் வெளியானது. அதுபோன்று ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது வீடியோ, புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்று ஒன்று வெளியாகவில்லை.
இந்நிலையில் ஜெயலலிதா தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு, அது பலனிக்காமல் மரணமடைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. ஆர்கே நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி அணி சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.
Last time OPS team has campaigned with Jayalalitha's coffin box, Now they are releasing her video. ADMK are playing political stunts.