ஆர்கே நகரில் இன்று இரவு பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடைபெற உள்ளது- தினகரன் பகிர்- வீடியோ

2017-12-19 14,450

ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இன்று இரவுக்குள் 120 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக தினகரன் தெரிவித்து உள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை ஐந்து மணியோடு நிறைவடைந்தது. இறுதிநாள் பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இன்று களம் இறங்கியதால், தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. முக்கியமாக சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி தினகரனுக்கு பிரம்மாண்டமான அளவில் கூட்டம் கூடியது.

டி.டி.வி தினகரன் பிரச்சாரம் செய்த வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் மக்கள் அதிக அளவில் கூடியதால், இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து அந்தப்பகுதியில் ஸ்தம்பித்தது. அதே போல, காசிமேடு பகுதியில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தனது கட்சி வேட்பாளர் மருதுகணேஷுக்கு வாக்கு சேகரித்தார்.

ADMK planned to distribute 120 crores cash as bribe to voters in RK Nagar Says TTV Dinakaran. Final Phase of campaigning ends in RK Nagar.

Videos similaires