காட்டேரி படத்தில் ஹன்சிகா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா. கையில் புதுப் படங்கள் இல்லாமல் இருந்தவருக்கு அதர்வா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சாம் ஆண்டன் இயக்கும் இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு வெயிட்டான கதாபாத்திரமாம்.
யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டீகே காட்டேரி என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. காட்டேரி படத்தில் பிரபல நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி ஹீரோவாகவும், ஓவியா ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆதி படத்தில் இருந்து விலகவே வைபவ் வந்துள்ளார்.
காட்டேரி படத்தில் வைபவ் ஜோடியாக ஹன்சிகா நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. இதை பார்த்த ஹன்சிகா அப்படியா என்று கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.
Buzz is that Hansika is approached to act in Vaibhav starrer Katteri to be directed by Deekay and produced by Studio Green. Oviya was already signed for this movie before Vaibhav replaced Adhi. Hansika has finished her latest outing with Prabhu Deva and ready to share screen space with Atharva.