பணி வழங்க மறுக்கப்பட்டதால் சுங்கசாவடியை முற்றுகையிட்ட சக ஊழியர்கள்- வீடியோ

2017-12-19 291

சுங்க சாவடியில் பணியாற்றிய பெண் கற்பமடைந்ததால் அவர் தொடர்ந்து வேலை பார்க்க அதிகாரிகள் அனுமதியளிக்காததால் சக ஊழியர்கள் சுங்கசாவடியை முற்றுகையின்று போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியில் கணக்காளராக ரேவதி என்பவர் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கர்பமடைந்துள்ளதால் அவருக்கு பணி வழங்க நிர்வாகம் மறுத்துள்ளனர். இது குறித்து ரேவதி நிர்வாகத்திடம் கேட்ட போது பேருகால ஊதியத்துடன் விடுப்பு கொடுக்க வேண்டும் என்று சட்டம் உள்ளதால் அவரை பணிக்கு வேண்டாம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ரேவதிக்கு பணி வழங்காத நிர்வாகத்தை கண்டித்து சக ஊழியர்கள் அனைவரும் திடீரென சுங்க சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் விரைந்து வந்து சுங்கசாவடி அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ரேவதிக்கு விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்குவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் சுங்கசாவடி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Des : As the woman who worked in the customs office, her colleagues staged a stranglehold against the customs officials because she was not allowed to work.

Videos similaires