குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்ட அந்த வாரிசு நடிகை ரொம்பவே அல்லாட வைக்கிறாராம், தயாரிப்பாளர் - இயக்குநர்களை.
மற்ற இளம் நடிகைகள் எல்லாம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் இவர் ஓவர் பந்தா காட்டுகிறாராம். வேற மாதிரி நினைக்காதீங்க... எல்லாம் வசதி விஷய்த்தில்தான். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும்தான் தங்குவேன் என்று அடம் பிடிக்கிறாராம். அதற்கு குறைவான ஹோட்டல்களில் தங்குவதில்லை. உடன் இரண்டு அல்லது மூன்று நபர்கள் வருகிறார்கள். அவர்களுக்கும் 5 நட்சத்திரம்தான். அந்த செலவும் தயாரிப்பாளர்கள் தலையில்தான் விழுகிறது.
நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பவர் அந்த கேரக்டருக்காக குண்டாக மாட்டேன் என்று வேறு சொல்லி விட்டாராம். இதனால் கிராபிக்ஸ் செலவு எகிறுகிறதாம். உடலை ஏற்றினால் அருந்ததி நடிகை போல அவதிப்பட வேண்டும் என்பது நடிகையின் பயம். இந்த காரணங்களால் வாரிசு நடிகையை அவாய்ட் செய்யத் தொடங்கியுள்ளது இண்டஸ்ட்ரி.
That latest top actress has denied for any adjustments for fecilities in shooting spots with producers.