மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு முதல் குற்றவாளி ஓ. பன்னீர் செல்வம் தான் என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்வது குறித்து தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி கருத்துக்களை கேட்டறிந்தது. அப்போது திமுக அதிமுக பாஜக என்று முக்கிய கட்சியின் நிர்வாகிகள் கலந்து கெண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் தங்களின் கருத்தை தெரிவித்து விட்டு வெளிவந்த செயல்தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் முதல் குற்றவாளி ஓ. பன்னீர் செல்வம் தான் என்று ஏற்கனவே அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றும் தற்போது அப்போலோ மருத்துவமனை நிர்வாகியும் கூறியுள்ளார். அது தான் உண்மை என்றும் முதல் குற்றவாளி ஓ. பன்னீர்செல்வம் தான் என்றும் குற்றம்சாட்டினார்.