ஆணுறை விளம்பரங்களை பகலில் ஒளிபரப்ப அரசு தடை விதித்தது ஏன் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவ்ந்த் விளக்கம் அளித்துள்ளார்.
ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் டிவியில் ஒளிபரப்ப அரசு தடை விதித்துள்ளது. ஆணுறை விளம்பரங்களில் நடிக்க பாலிவுட் பிரபலங்கள் ஆர்வம் காட்டும் நேரத்தில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியிருப்பதாவது,
அதிக அளவில் ஆணுறை விளம்பரங்கள் எடுக்கப்பட வேண்டும். ஆணுறை பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்படுத்த வேண்டும். எதற்காக ஆணுறை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு தெரிய வேண்டும். சமூக சேவையாக நினைத்தே நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்தேன். சன்னி லியோன், பிபாஷா பாசு ஆகியோர் ஆணுறை விளம்பரத்தில் நடித்தபோது அதை அரசு தடை செய்யவில்லை. நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்து அது பற்றி அனைவரும் பேசியவுடன் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரத்தை ஒளிபரப்பக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. என் விளம்பரத்தை பார்க்கும் முன்பே அரசு தடை விதித்ததுள்ளது. அரசுக்கு அவ்வளவு பயமா? அரசுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை. ஆணுறை விளம்பரத்தை நிறுத்தினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும். இந்தியர்களுக்கு எய்ட்ஸ் வர வேம்டும் என்று அரசு விரும்புகிறது போன்று. அரசு என்னை குறி வைத்தே விளம்பரத்திற்கு தடை விதித்துள்ளது. நான் படத்தில் நடித்தால் அது அரசுக்கு பிரச்சனை. தற்போது விளம்பர படத்தாலும் அரசுக்கு பிரச்சனையா? பிரதமர் மோடி எனக்கு ஆதரவளித்து இந்த முட்டாள்தனமான தடையை நீக்குவார் என்று நம்புகிறேன் என்று ராக்கி தெரிவித்துள்ளார்.