பொருளாதார சீர்திருத்தங்களை கிடப்பில் போடுமா பாஜக?- வீடியோ

2017-12-18 1,041

குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே காட்டுவதாக தெரிகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடுகிறது. இதனால் ஆறாவது முறையாக அம்மாநிலத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சியமைக்கிறது. இதேபோல் ஹிமாச்சலிலும் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைக்கவுள்ளது.

பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் ஜிஎஸ்டி ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல் வெளியாயின

ஆனால் குஜராத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு சீர்திருத்தங்கள் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக தேர்தல் முடிவில் மோடியின் சீர்திருத்தங்களில் சிறிய அளவிலா மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் பாஜக 150 இடங்களை டார்கெட்டாக வைத்து வேலை செய்தது. ஆனால் தனது டார்செட்டை பாஜகவால் அடையமுடியவில்லை.





PM Modi had pushed through radical economic reforms such as note ban and the GST despite expected negative impact on people. BJP had set a target of 150 seats in Gujarat. But BJP got less seats in than expected.

Videos similaires