அரவிந்த் சாமிக்கு பிடித்த ஹீரோ தலயாம்.. ஆனா இது வேற- வீடியோ

2017-12-18 1

அரவிந்த்சாமிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று தெரிய வந்துள்ளது. சினிமாவை விட்டு விலகி இருந்த அரவிந்த் சாமி செகண்ட் இன்னிங்கிஸில் அசத்தி வருகிறார். அவரை தேடி வித்தியாசமான பட வாய்ப்புகள் வருகின்றன. இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
மணிரத்னம் சாரின் புதிய படம் பற்றி என்று ஒருவர் கேட்டதற்கு, நான் அதில் நடிக்கிறேன். பாஸுக்கு பிடிக்காது என்பதால் எதுவும் கூற முடியாது என்று அரவிந்த்சாமி பதில் அளித்துள்ளார்.
விரைவில் இயக்குனராகும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, ஆமாம் 2018ம் ஆண்டில் என்று அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
ஆசைப்பட்டு கிடைக்காத விஷயம் எது ப்ரோ என ஒருவர் கேள்வி எழுப்பினார். கிடைக்காத விஷயத்துக்கு ஆசைப்பட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி.
தல படத்தில் வில்லனாக நடிக்கும் ஐடியா உள்ளதா என்று ஒருவர் கேட்டார். அதற்கு இல்லை என்று கூறியுள்ளார் அரவிந்த் சாமி.
அரவிந்த் சாமிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் டோணியாம்.


Actor Arvind Swami had a chat session with his fans. He answered the questions asked by his fans. He gave interesting answers and revealed his plan for 2018.