குஜராத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையேயான கடுமையான போட்டி இன்றைய தேர்தல் முடிவுகளை சுவாரஸ்யமாக்கியது. குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது பாஜக தான் என்பது உறுதியானாலும், காங்கிரசின் வளர்ச்சி பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஜராத் தேர்தல் முடிவுகளை வைத்து டுவிட்டரில் வலம் வரும் சில சுவாரஸ்யமான டுவீட்டுகள் இதோ. டிசம்பர் 18 குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் இன்றைய நாள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கான அளவுகோலாக இருந்தது. முதன்முறையாக சோனியாகாந்தி இல்லாமல் தனித்து களமிறங்கி பிரச்சாரம் செய்து வந்தார் ராகுல்காந்தி. ராகுல்காந்தியின் பிரச்சாரமா அல்லது மக்களின் எதிர்ப்பலையா என்கிற குழப்பம் ஒருபுறமிருந்தாலும் பாஜகவின் வெற்றி என்பது போராட்ட களமாகவே அமைந்தது.
இன்றைய வாக்கு எண்ணிக்கையானது தொடக்கம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமால் முன்னிலை நிலவரத்திலேயே அனல் பறந்தது. ஒரு ரவுண்டில் காங்கிரஸ் முன்னிலை வகித்தால் அடுத்த ரவுண்டில் பாஜக முன்னிலை என்று முன்னிலை நிலவரம் சக்கரம் போல மேலும் கீழும் சுழன்று வந்தது. குஜராத் தேர்தலையொட்டி டுவிட்டர் பக்கத்திலும் ஏராளமான ட்ரால்கள் நிரம்பி வழிகின்றன. அவற்றில் சில:
முன்னிலை நிலவரம் மாறி மாறி வருவதால் தொடக்கத்தில் அழுது கொண்டிருந்த பாஜக பின்னர் வேதாளம் அஜித் போல 11 மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி மூடுக்கு மாறியது. அஜித்தின் தெறிக்கவிடலாமா சீனை வைத்து பாஜகவின் இன்றைய காலை முதல் தற்போது வரையிலான நிலவரத்தை போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
குஜராத்தின் வெற்றிக்காக பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கான வெற்றி. அவுரங்கசிப்பிற்கு நன்றி கூறியது, பாகிஸ்தான் தூண்டுவதாக கண்ணீர்விட்டது, கடல் விமானத்தில் பறந்தது, மணிசங்கர் ஐயரின் விமர்சனம் இவற்றிற்கு கிடைத்த வெற்றி தான் பாஜகவின் வெற்றி.
Gujarat assembly election results where in favour of BJP, how BJP is enjoying the mood what is the secret of succcess. Here are some interessting tweets.