தமிழ் சினிமாவையே வச்சு செஞ்ச அருவி !!- வீடியோ

2017-12-18 8

அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், தளபதி விஜய், கே.எஸ். ரவிக்குமார், தமிழ் சினிமாவை மரண கலாய் கலாய்த்துள்ளனர். வெள்ளிக்கிழமை வெளியான அருவி படம் பற்றி தான் நெட்டிசன்ஸ் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிதி பாலனின் நடிப்பை அனைவரும் பாராட்டியுள்ளனர். ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் படம் செம என்று தெரிவித்துள்ளனர்.
விஜய் படம் நல்ல படமா அது எது? என்று ஒரு காட்சியில் வசனம் வைத்துள்ளனர். இதை பார்த்த விஜய் ரசிகர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இன்னும் படத்தையும், நடிகர்களையும் சமூக வலைதளங்களில் சொல்ல முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பல குடும்பங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து வருவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் பெருமையாக கூறி வருகிறார். இந்நிலையில் அருவி படத்தில் சொல்வதெல்லாம் சத்தியம் என்ற பெயரில் லட்சுமியின் நிகழ்ச்சி டிஆர்பிக்காக நடக்கும் நாடகம் என்று தெரிவித்துள்ளனர்.
அருவியிடம் ஒருவர் கதை சொல்ல அதை கேட்ட அவர் என்ன பழைய கதையாக சொல்கிறாய் நீ என்ன கே.எஸ். ரவிக்குமாரா என்று முகத்தில் அடித்தது போன்று கேட்டுள்ளார்.



Aruvi has made fun of Vijay, Solvathellam Unmai, KS Ravikumar and the quality of Tamil movies. Vijay fans couldn't control their temper after watching the movie.