குஜராத்தில் மோடி மேஜிக் மங்கிப்போய்விட்டதாக கருதப்படுகிறது. எனவேதான் கடும் போராட்டத்திற்கு இடையே பாஜக வெற்றியை தக்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு இதுவே மிகப்பெரிய வெற்றி என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் டிசம்பர் இருகட்டங்களாக நடைப்பெற்றது. இதையடுத்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் மிக சிறப்பாக வெல்லும் என பார்க்கப்பட்ட நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரம் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. எண்ணப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் காலை 9 மணியிலிருந்து, நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவியேற்ற பின்னர் இரு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இது ராகுல்காந்திக்கு வளர்ச்சி என்றும், மக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்றே கருதினர்.
The BJP's victory with a small margin will be an achievement for the party which has struggled to mollify voters after its radical economic reforms such as demonetisation and GST disrupted businesses and caused resentment among its core voter groups.