ஆர்கே நகரில் அனைவரது கைகளிலும் ரூ. 2000 நோட்டுகள் புழங்கி வருவதால் பணக்கார தொகுதியாகவே மாறிவிட்டது அடேங்கப்பா ஆர்கே நகர் தொகுதி. ஆர்கே நகரில் இன்று காலை முதல் பணப்பட்டுவாடா நிகழ்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கொருக்குபேட்டையில் உள்ள பிசியோதெரபி மையத்தில் மூட்டை மூட்டையாக பணம் பதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆளுங்கட்சியினர் ஒரு வோட்டுக்கு ரூ.6000 விநியோகம் செய்வதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். அதுவும் ஒரே நாளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு 3 மணி நேரத்தில் பணம் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாம். இந்நிலையில் எல்லார் கையில் ரூ. 2000 நோட்டு புழங்கி வருகிறது. ரூ .2000 நோட்டுகளை இரட்டை படையில் கூட்டிக் கொண்டே ரூ. 10,000 வரை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூ.2000-த்துக்குள் கீழ் யாருக்கும் பணம் விநியோகம் செய்யவில்லை. பெண் நிர்வாகிகள் மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் மூலம் ஆர்கே நகர் தொகுதி பணக்கார தொகுதியாகவே மாறிவிட்டதாக ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது.