புதிய இயக்குனர்களால் மேலும் வலுபெறும் தமிழ் சினிமா- வீடியோ

2017-12-16 3

தமிழ் சினிமாவில் வருடந்தோறும் கிட்டத்தட்ட 200 படங்கள் வெளியாகின்றன. ஆனால், அவற்றில் வெளியாகும் நல்ல படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். முன்னணி நடிகர்களின் படங்கள் பல வசூல் ரீதியாக வெற்றி பெற்றுவிட்டாலும், நல்ல படம் என்கிற ரீதியில் பார்த்தால் தேறுவது வெகு சில திரைப்படங்களே. சமூகத்திற்குத் தேவையான கருத்துகளோடு எடுக்கப்படும் மாற்று சினிமாக்கள் ரிலீஸுக்கு தியேட்டர்கள் கூட கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் சூழலும் நிலவுகிறது. அப்படி வெளிவந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறுவது ஒன்றிரண்டு படங்கள் தான்.
தமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் சினிமாவிற்கு மாறிய பிறகு கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி வருகிறது. இந்த ஆண்டிலும் அந்த எண்ணிக்கை 200 படங்களைத் தாண்ட உள்ளது.
இளம் இயக்குநர்களின் படங்கள் நித்திலன் இயக்கத்தில் வெளிவந்த 'குரங்கு பொம்மை', ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த '8 தோட்டாக்கள்', லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மாநகரம்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர்கள் மூவருமே அறிமுக இயக்குநர்கள் என்பதும் சிறப்பு. சில வாரங்களில் நல்ல படங்கள் இந்த ஆண்டில் ஆச்சரியப்படும் வகையில் கடந்த நான்கு வாரங்களில் வெளிவந்த 25 படங்களில் 'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' ஆகிய படங்கள் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

About 200 films are released annually in Tamil cinema. But we can count the good pictures of them. Though the films of leading actors have won numerous box office successes, it is quite a few films to watch for a good movie. In recent weeks, the three films released by the trusted directors have been well received by the fans. In this year 2017, tamil cinema has improved so much.


Audio Credits :

Tobu - Colors [NCS Release] https://youtu.be/MEJCwccKWG0
http://www.youtube.com/tobuofficial
Music promoted by Audio Library https://youtu.be/PQC7VaL7xlc