ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா புகார் எழுந்துள்ளதால் அங்கு 3 மணி நேரமாக நடைபெற்று வரும் அசாதாரண சூழல்களால் இடைதேர்தல் மீண்டும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்தவுடன் ஆர்கே நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் தமிழக மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.89 கோடி பணம் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி மீண்டும் இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். எனினும் இன்று பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது.
பணப்பட்டுவாடா தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸார் தவறாக கைது செய்துவிட்டதாகவும் அவர்களை விடுவிக்க கோரியும் ஆர் கே நகர் மக்கள் சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
Again RK Nagar by election can be cancelled as the political party is planning to distribute Rs. 100 Crores.