அப்பாவை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்த அருவி கேட்ட கேள்வி !!- வீடியோ

2017-12-16 3,651

அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் நாயகியாக நடித்திருக்கும் 'அருவி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. 'அருவி' படத்தில் அருவியாக நடித்திருக்கும் அதிதி பாலனின் சிறப்பான நடிப்பை திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் புகழ்ந்திருக்கின்றனர். அருவி பேசும் வசனங்கள், பலரையும் நிற்கவைத்துக் கேள்வி கேட்கின்றன. அவற்றில், அப்பாவிடம் அருவி கேட்கும் கேள்விகள் எல்லோர் மனதையும் கரைத்துக் கண்கலங்கச் செய்யும்.
அன்பான குடும்ப அமைப்பில் சுதந்திரமாக வாழும் பெண் ஒருத்தி, எதிர்பாராவிதமாக திடீரென தூக்கி வீசப்படுகிறாள். அவள் இந்த அளவுக்கு நிராகரிக்கப்படுவதற்கான காரணம் என்ன... அப்படி நிராகரிக்கப்பட்டவள் இந்தச் சமூகத்திற்குச் சொல்ல வருவது என்ன என்பதுதான் 'அருவி' படத்தின் கதை.
குடும்பம் எனும் அமைப்புக்குள் அன்பு பிணைந்து வாழும் அருவி, செய்யாத தவறால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப் படுகிறாள். அதுநாள் வரை அவள் மீது குடும்பம் கொண்டிருந்த அன்பு எப்படி ஓரிரு நிமிடங்களில் முற்றிலுமாக விடுபட்டுப் போகும் என்பதுதான் பெரும் கேள்வி. ஆனால், நடைமுறை யதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.

தனக்கு சிகரெட் நாற்றம் பிடிக்காததால், சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையே நிறுத்திவிட்ட அப்பா, தான் எவ்வளவு சொல்லியும் தன்னை துளியும் நம்பவில்லை எனும் நிலைக்கு வரும்போது எவ்வளவு வேதனைகளையும், வலியையும் அவள் உணர்வாள் என்பதை அருவி அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது.


The film 'Aruvi' starring Aditi balan directed by Arunprabhu purushothaman is released in theaters yesterday. Most of the filmmakers and fans have been praised for the outstanding performance of Aditi. In this movie, aruvi raises questions to her father is most touchable.


Audio Credits :

Song: Cjbeards - Raindrops (Vlog No Copyright Music)
Music provided by Vlog No Copyright Music.
Video Link: https://youtu.be/OlUX1llY2FU

Videos similaires