மீனா மிஸ் செய்த இயக்குனரை மீனா மகள் பிடித்துவிட்டார்!!- வீடியோ

2017-12-16 3,085

விஜய் நடித்த 'பிரண்ட்ஸ்' படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் சித்திக். அந்தப் படத்தில் தேவயானி நடித்த வேடத்தில் நடிக்க முதலில் மீனாவை தான் அழைத்திருக்கிறார் சித்திக். ஆனால் அந்த சமயத்தில் மீனா வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் நடிக்கவில்லையாம். ஆனால், அதன்பிறகும் சித்திக் இயக்கத்தில் மீனா நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்பதால் மீனாவுக்கு சற்று வருத்தம். இந்நிலையில், தற்போது மீனாவின் மகளான தெறி பேபி நைனிகா, 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் சித்திக் இயக்கியுள்ள படத்தில் நடித்திருக்கிறார்.

இது பற்றி மீனா, "பிரண்ட்ஸ் படத்தில் சித்திக் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது என் மகள் அவரது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானே சித்திக் படத்தில் நடித்தது போன்று பீல் பண்ணுகிறேன்" எனக் கூறியிருக்கிறார். அரவிந்த்சாமி, அமலாபால், பேபி நைனிகா, மாஸ்டர் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படம் மலையாளத்தில் ஹிட்டான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக். இந்தப் படம் விரைவில் ரிலீஸாக


Malayalam director Siddique directed Vijay starrer 'Friends'. Siddiqe first called Meena to act in the role of Devayani in the film. But Meena did not act because some other films were busy at that time. In this case, Meena's daughter Baby Nainika has acted in a film titled 'Bhaskar oru Rascal' directed by Siddique.