டிசம்பர் மாதம் என்றாலே இந்தோனேஷிய மக்கள் பீதிகொள்ளும் அளவுக்கு இயற்கை சீற்றங்கள் டிசம்பரில் தொடர்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, பூமியை போன்று வேறு கிரகம் உள்ளதா, வேற்றுக்கிரகவாசிகள் உண்மையா வேற்று கிரகத்திற்கு எப்போது குடியேறலாம் என மனிதன் ஒவ்வொரு நாளும் தனது ஆராய்ச்சியை விரிவாக்கி கொண்டே செல்கிறான். ஆனால் எல்லாம் எனக்குப் பிறகுதான் என அவ்வப்போது பெரிடர்கள் மூலம் நினைவூட்டி செல்கிறது இயற்கை. இயற்கை சீற்றங்களால் ஒவ்வொரு நாடும் பேரிழப்பை சந்தித்து வருகிறது.
குறிப்பாக இந்தோனேஷியாவில் டிசம்பர் மாதங்களில் இயற்கை சீற்றங்களும் பேரிடர்களும் தொடர்ந்து வருகிறது. இதனால் டிசம்பர் மாதம் என்றாலே அய்யோ வந்துவிட்டதா என அந்நாட்டு மக்கள் பீதிகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இந்தோனேஷிய தீவுகள் மற்றும் இந்தோனேஷிய கடற்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டாலும் டிசம்பர் மாதத்தில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் உருவானது.
Indonesia facing natural disaster on December months. People afraid of December month by the natural disasters.