ரசிகர்களை ஈர்க்கும் அருவி .... தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் குறிஞ்சி பூ இவள்- வீடியோ

2017-12-16 14

தமிழ் சினிமாவில் இப்படியொரு நடிகையா என்று வியக்கவைக்கும் அளவுக்கு அறிமுகமாகி உள்ளார் 'அருவி' படத்தின் ஹீரோயினான அதிதி பாலன். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருது பெற்று நேற்று வெளியாகி உள்ள 'அருவி' படத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 'அருவி' படத்திற்கு கிடைக்கும் இவ்வளவு பாராட்டுகளுக்குச் சொந்தக்காரி படத்தில் அருவியாக நடித்திருக்கும் அதிதி பாலன் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

முன்னணி நடிகைகள் மூன்று பேரிடம் இந்தப் படத்திற்காக நடிக்கக்கேட்டு சரிவராததால் புதுமுகத்திற்கு ஆடிஷன் வைத்தார்கள். 500 பேர் கலந்துகொண்ட ஆடிஷனில் தேர்வாகி 'அருவி' படத்தில் இடம்பிடித்தவர் இந்த அதிதி பாலன்.
சென்னையைச் சேர்ந்த அதிதி, பெங்களூரில் சட்டம் படித்தவர். நடிப்பில் சிறுவயதிலிருந்தே ஆர்வம் அதிகமிருந்ததால் வக்கீல் தொழிலுக்குச் செல்லாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். நண்பர் ஒருவர் சொன்னதற்காக அருவி ஆடிஷனில் கலந்துகொண்டாராம்.

In Tamil cinema, actress Aditi balan is a new comer has been surprised performance in the film 'Aruvi'. There are a lot of compliments for the film 'Aruvi' which has been screened at various international film festivals and won the award. Aditi balan acts as Aruvi, she was praised by fans.