சீனாவில் கின்னஸ் சாதனைக்காக 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு பெரிய நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் நீளமான நூடுல்ஸ் என்ற சிறப்பு பெயரை பெற்று இருக்கிறது. இதை தயாரிப்பதற்கே பல மணி நேரம் ஆகி இருக்கிறது. மேலும் முக்கிய சமையல் கலைஞர்கள் பலர் ஒன்றாக இணைந்து இந்த சாதனையை செய்து இருக்கிறார்கள். சீனர்களின் முக்கிய உணவு நூடுல்ஸ் ஆகும். அதை வைத்து தற்போது அவர்கள் பெரிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த 5 நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸை தயாரிக்க பல மணி நேரம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த நூடுல்ஸை தயாரிக்க மொத்தம் 40 கிலோ ரொட்டி மாவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவில் அதிகம் பயன்படுத்தும் ராமன் நூடுல்ஸ் வகையில் இது தயாரிக்கப்பட இருந்ததால் ரொட்டி மாவு வாங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக 26.8 லிட்டர் தண்ணீர் செலவாகி இருக்கிறது. அதேபோல் 0.6 கிராம் உப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதை செய்வதற்கு மொத்தம் 17 தலைசிறந்த சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த நூடுல்ஸ் செய்வதற்கு 15 மணிநேரத்திற்கும் அதிகமாக ஆகியுள்ளது. இது முழுக்க முழுக்க கைகளால் செய்யப்பட்ட நூடுல்ஸ் ஆகும். மொத்தமாக இது 68 கிலோ இருந்துள்ளது. மேலும் 3 கிலோ மீட்டர் நீளம் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
World's longest Noodle is over 3 KM long which made entirely by hand in China. This noodles has prepared in 15 hours.