வனப்பகுதிக்குள் மாவேஸ்டுக்கள் ரகசிய கூட்டம் நடத்துவதாக தெலுங்கானா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க வனப்பகுதிக்குள் சென்ற போலீசாருக்கும் மாவேயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 6 மாவோயிஸ்டுக்கள் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் மேலப்பள்ளி வனப்பகுதியில் மாவோயிஸ்டுக்கள் ரகசிய கூட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் காட்டுப்பகுதிக்குள் சென்று மாவோயிஸ்டுக்கள் கூட்டத்தை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்ட மாவோயிஸ்டுக்கள் உடனே தங்கள் கைகளில் இருந்த ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். பதிலுக்கு போலீசார் மாவோயிஸ்டுக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் 6 மாவோயிஸ்டுக்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒருசில மாவோயிஸ்டுகளை பிடித்துள்ளதாகவும் எஞ்சியவர்கள் தப்பித்து சென்றதாகவும் தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுக்கள் உள்ளனரா என்று தெலுங்கானா காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.