ஓராண்டு கால ரகசிய காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமணம் செய்து கொண்ட விராத் கோஹ்லி- அனுஷ்கா தம்பதியின் தேனிலவு செல்பி படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாள்களாக காதலித்து வந்தனர். எனினும் இதை மறுத்து வந்தனர்.இந்நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த திங்கள்கிழமை அன்று இத்தாலியில் உள்ள டஸ்கன் ரிசார்டில் நடைபெற்றது.இந்நிலையில் இவர்கள் இரு இடங்களில் திருமண வரவேற்புகளை நடத்துகின்றனர். ஒன்று வரும் 21-ஆம் தேதி டெல்லியிலும், 26-ஆம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது.
இதனிடையே புதுமணத்தம்பதி தேனிலவுக்காக சென்றுள்ள செல்பி படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அதில் சொர்க்கத்தில் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்த இடம் என்று தெரியவில்லை. பின்னால் குளு குளு பனிமலை போல் உள்ளதை பார்க்கும்போது இவர்கள் ஐரோப்பாவில் எங்காவது ஒரு இடத்தில் தங்களது தேனிலவை கொண்டாடி வருவது தெரிகிறது.
Actress Anushka Sharma's Honeymoon Selfie With Virat Kohli Goes Viral. It seems they are in somewhere in Europe.