புத்தாண்டு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பு ஒன்று பெங்களூரில் போராட்டம் நடத்தியது.
பெங்களூரில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் சில பிரபல கம்பென்களில் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பான கர்நாடக ரக்ஷனா வேதிகே யுவசேனே பெங்களூரில் போராட்டம் நடத்தியது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் கூறியதாவது,
சன்னி லியோனுக்கு கன்னட கலாச்சாரம் பற்றி எதுவும் தெரியாது. அரைகுறை ஆடை அணிந்து பெண்கள் நடனமாடி எங்களின் கலாச்சாரத்தை கெடுப்பதை நாங்கள் விரும்பவில்லை.
சன்னி லியோன் நிகழ்ச்சியை நடத்தவிட மாட்டோம் என்றார்.
இதற்கு முன்பு சன்னி பல முறை பெங்களூர் வந்துள்ளார். அப்போது எல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கன்னட பட ஷூட்டிங்கிலும் அவர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A pro-Kannada group protested in Bangalore against actress Sunny Leone' New Year programme. Sunny Leone is attending a new year function which will be held in a big hotel in Bangalore.