இந்திய வீரர் கோஹ்லி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி அளிக்கும்படி பிசிசிஐ அமைப்பிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்காக முறைப்படி பிசிசிஐ கூட்டங்களில் கலந்து கொண்டார். இந்த நிலையில் கோஹ்லியின் சம்பளம் அதிகபட்சமாக 8 கோடி வரை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது. இதனால் இந்திய அணியில் கோஹ்லிக்குத்தான் அதிக சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பிசிசிஐ, கிரிக்கெட் உலகிலேயே இனி கோஹ்லிக்குத்தான் அதிக சம்பளம் என்று ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது. அவர் சம்பளத்தை மொத்தமாக பல மடங்கிற்கு உயர்த்தி உள்ளது.
இந்த கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதாக கோஹ்லி குற்றச்சாட்டு வைத்து இருந்தார். மற்ற நாட்டு வீரர்களை விட நாங்கள் அதிக போட்டி விளையாடுகிறோம் ஆனால் சம்பளம் குறைவாக இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு முன்னாள் வீரர்கள், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டோணி ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.