என்னது குஜராத்தில் பாஜக தோல்வியடையுமா ? இந்த கணிப்பு பாஜகவுக்கு ஷாக் கொடுக்கிறதே!- வீடியோ

2017-12-15 8,893

டிவி சேனல்கள் சார்பில் வெளியான குஜராத் எக்ஸிட் போல்கள் பலவும் பாஜகதான், வெல்லும் என கூறியுள்ளன. ஆனால், சில நிபுணர்கள் வேறு மாதிரி கருத்து கூறுகிறார்கள். குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 2வது கட்ட தேர்தல் நேற்று முடிந்தது. இதையடுத்து பல டிவி சேனல்களும், கருத்து கணிப்பு ஏஜென்சிகளுடன் இணைந்து எடுத்த கருத்து கணிப்பு முடிவுகளை இரவு வெளியிட்டன.

அனைத்து டிவி சேனல்களுமே குஜராத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தெரிவித்தன. ஆனால் சஹாரா டிவி மட்டும்தான் அதிகபட்சமாக 120 சீட்டுகள் வரை பாஜக வெல்லும் வாய்ப்புள்ளது என கூறியது. பிற சேனல்கள் அதைவிட குறைவான சீட்டுகளையே சுட்டிக்காட்டுகின்றன. இதனால் பாஜக முன்னிலை பெற்றாலும் அறுதி பெரும்பான்மை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஸ்வராஜ் இந்தியாவின் தேசிய தலைவரும், டிவி சேனல் விவாதங்களில் பங்கேற்கும் அரசியல் விமர்சகருமான, யோகேந்திர யாதவ் கணிப்பு வேறு மாதிரி உள்ளது. அவர் இரு தினங்கள் முன்பு இந்த கணிப்பை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Yogendra Yadav projections for Gujarat is gives shock to BJP as he predict congress is in upper hand.

Videos similaires