பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவடைந்துள்ளது. குஜராத்தில் இம்முறையும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இதுவரை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9ஆம்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. டிசம்பர் 18ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.
குஜராத்தில் 1998ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கேசுபாய் படேல் முதல்வராக பதவி வகித்தார். 2001 ஆம் ஆண்டு கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து முதல்வராக பொறுப்பேற்றார் மோடி.
குஜராத்தில் அவர் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மக்களை கவரவே தொடர்ந்து 2002, 2007, 2012 ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவே ஆட்சியை தக்கவைத்தது. குஜராத் முதல்வராக 4 முறை பதவி வகித்த மோடி தற்போது பிரதமராக உள்ளார். எனவே குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் முழு முனைப்போடு பிரசாரம் செய்தது பாஜக.
Five of seven exit polls show the Bharatiya Janata Party (BJP) heading towards a big win in the Gujarat Assembly elections 2017.According to the exit poll Gujarat, the BJP big victor in Assembly poll 2017.