ரிபப்ளிக் டிவி நடத்திய மூன்று கருத்து கணிப்பிலுமே குஜராத்தில் பாஜக தான் ஆட்சியை புடிக்குமாம்

2017-12-14 1

குஜராத் சட்டசபையில் எந்த கட்சி வெல்லப்போகிறது என்று 3 எக்ஸிட் போல் முடிவுகளை ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ளது. 3 கருத்துக்கணிப்புகளுமே பாஜகவின் வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்துகின்றன. குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கான அங்கீகரமாக பார்க்கப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநில மக்கள் பாஜகவின் அதிரடி பொருளாதார மாற்றங்களான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரங்களை எப்படி பார்க்கின்றனர் என்ற எதிர்பார்ப்பே குஜராத் தேர்தல் முடிவுகளை அனைவரையும் பார்க்க வைத்துள்ளது. குஜராத் சட்டசபை தொகுதிகளுக்கான இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் ரிபப்ளிக் டிவி 3 கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு அது குறித்து ஆய்வு செய்து வருகிறது. 2012 சட்டசபை தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் இதர கட்சிகள் 6 இடங்களிலும் வென்றது.

இந்நிலையில் சி வோட்டர் கருத்துக்கணிப்பில் பாஜக 108 இடங்களில் வெல்லும் என்றும், காங்கிரஸ் கட்சி 74 இடங்களில் வெல்லும் என்றும் கூறியுள்ளது. இதே போன்று ரிபப்ளிக் டிவியின் தொலைக்காட்சி பார்ட்னரான நிர்மான டிவி பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 74 இடங்களிலும் இதர கட்சியினர் 4 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Republic TV's 3 exit polls results on Gujarat elections says that BJP will definitely capture the power back but not as much seats got in 2012 assembly elections.

Videos similaires