ஒவ்வொரு வருடமும் கூகுள் அந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை வெளியிடும். உலகம் முழுக்க அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் 'மேகன் மார்கள்' என்ற அமெரிக்க நடிகை இடம்பெற்று இருக்கிறார். அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஐபோன் 8 இடம்பெற்று இருக்கிறது. இந்த லிஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி ஆச்சர்யமாக 9வது இடத்தில் இருக்கிறது. தற்போது இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் எது என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மட்டும் வித்தியாசமாக இந்த முறை சில விஷயங்கள் தேடப்பட்டு இருக்கிறது. சென்ற வருடம் இதில் 'போகி மான் கோ' என்று வீடியோ கேம் முதல் இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் 6 வது இடத்தில் இருக்கிறது 'பத்திரிநாத் கி துல்ஹனியா' பாலிவுட் படம். அலியாபட், வருண் தவான் இணைந்து நடித்த இந்த படம் இந்தியில் மாஸ் ஹிட்டானது. 80களில் பாலிவுட்டில் வந்த 'தம்மா தம்மா' என்ற பாடல் இந்த படத்தில் ரீமேக் செய்யப்பட்டு இடம்பெற்று இருந்தது. இந்த பாடலை கேட்பதற்காகவே பலர் இந்த படம் குறித்து கூகுளில் தேடி இருக்கிறார்கள்.
கூகுள் தேடலின் நான்காவது இடத்தில் இன்னொரு பாலிவுட் படம் இருக்கிறது. சேட்டன் பகத் எழுதிய புத்தகத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட 'ஹால்ப் கேர்ள்பிரண்ட்' என்ற படம்தான் 4 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த படம் 100 கோடி வசூலை தாண்டி இன்னும் சில இடங்களில் ஓடிக் கொண்டு இருக்கிறது. சேட்டன் பகத்தின் புத்தக பிரியர்கள் இதையும் விடாமல் பார்த்து ஹிட் அடிக்க வைத்தார்கள். சிலர் இந்தபடம் குறித்து மோசமாகவும் விமர்சனம் வைத்து இருந்தனர்.
Top 10 Most Searched Keywords on Google India