குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சஹாரா டிவி கூறியிருக்கிறது. குஜராத் தேர்தலில் பாஜக 110 முதல் 120 இடங்களில் வெற்றி அடையும் என்று கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. டிசம்பர் 18-ந் தேதி முடிவுகள் வெளியிடப்படும்
இந்த நிலையில் தற்போது சஹாரா டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த கருத்து கணிப்பின் படி குஜராத்தில் 110 முதல் 120 இடங்களில் பாஜக வெல்லும். அதேபோல் காங்கிரஸ் 65 முதல் 75 இடங்களைக் கைபற்றும் என்று தெரிவித்து இருக்கிறது. இந்த கருத்து கணிப்பில் குஜராத்தில் பாஜக மீண்டும் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
Shara Tv exit poll on Gujarat election. BJP will get 110 to 120 and Congress will get 65-75 seats.