சாயம் கலந்த தேயிலை தூள்களை தயாரித்த இரண்டு தனியார் ஆலைகளை சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் தேயிலை தூள்கள் பயிரிடப்பட்டு அவைகள் அங்குள்ள சிறு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலை ஆலைக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தேயிலை இலைகளை கொடுத்துள்ளனர். ஆலை நிர்வாகம் தேயிலை தூளில் நிறம் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக தேயிலை தூள் தயாரிக்கும் போது சாயங்களை கலக்கப்படுவதாக தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஆலைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது தேயிலை தூள் மாதிரிகளை எடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆய்வு கூடத்தில் தேயிலை தூள்களில் சாயம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேயிலை தூளில் சாயம் கலந்த இரு ஆலைகளை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இரு ஆலைகளிலும் பல லட்சம் டன் மதிப்புள்ள கலப்பட தேயிலை தூள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுள்ளனர்.
Des : The authorities have decided to seal two private factories produced by dye mixed tea powder.