மறக்கன்றுடன் தயாரானது கோஹ்லி-அனுஷ்கா ரிசப்ஷன் பத்திரிகை- வீடியோ

2017-12-14 2

விராட் கோஹ்லி, அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பத்திரிகையில் புதுமை செய்துள்ளனர். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். வரும் 21ம் தேதி டெல்லியிலும், 26ம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கான பத்திரிகையில் இருவரும் புதுமை செய்துள்ளனர்.
கோஹ்லி-அனுஷ்கா திருமண வரவேற்பு பத்திரிகை இருக்கும் பெட்டியில் மரக்கன்று ஒன்று வைத்து கொடுத்து வருகிறார்கள். மும்பையில் ஏராளமான பிரபலங்களுக்கு பத்திரிகை கொடுத்தாகிவிட்டது.
கோஹ்லியும், அனுஷ்காவும் இத்தாலியில் திருமணத்தை முடித்துக் கொண்டு தேனிலவுக்கு ரோம் நகருக்கு சென்றுள்ளனர். திருமண வரவேற்பு முடிந்த பிறகு புத்தாண்டை கொண்டாட தென்னாப்பிரிக்காவுக்கு செல்கிறார்கள்.
திருமண வரவேற்பு பத்திரிகையை முதல் ஆளாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்துள்ளார் கோஹ்லி. அனுஷ்காவோ தனது முதல் ஹீரோவான ஷாருக்கானுக்கு முதல் பத்திரிகையை கொடுத்துள்ளார்.

Virat Kohli and Anushka Sharma have kept a sapling inside their wedding reception invitation box. One reception will be held in Delhi on december 21st and another one in Mumbai on december 26th.