மீனவர்களுக்கும் தனி அமைச்சகம் அமைக்க மத்திய அரசிடம் மன்றாடுகிறோம்- வீடியோ

2017-12-14 2,669

விவசாயிகளுக்கென தனி அமைச்சகம் இருப்பதை போல் மீனவர்களுக்கும் தனி அமைச்சகம் அமைக்க மத்திய அரசை தங்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அப்போது காணாமல் போன மீனவர்களை எதிர்நோக்கி சின்னத்துறையில் உறவினர்களும், சக மீனவர்களும் காத்து கிடக்கின்றனர். அங்கு சென்ற ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது காணாமல் போன 400-க்கும் மேற்பட்ட மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு மீனவ பெண்கள் ராகுலிடம் கோரிக்கை அளித்தனர்.

இதையடுத்து மீனவ மக்களிடையே தமிழில் வணக்கம் என்று தொடங்கிய ராகுல் ஆங்கிலத்தில் பேசினார். அதை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தமிழில் மொழிபெயர்த்தார்.
ராகுல் பேசுகையில், உங்களை சந்திக்க ஓகி புயல் பாதித்தபோதே வந்திருக்க வேண்டும். ஆனால் குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்காக சில முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்ய வேண்டியிருந்ததாலும், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாலும் என்னால் வரமுடியவில்லை.

Congress President Rahul Gandhi met fishermen in Kanniyakumari. He says that his party demands to set up separate ministry for fishermen as the farmers got.

Videos similaires