பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடிக்கும் திரைப்படம் 'இரும்புத்திரை'. இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார்.
தற்போது 'இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
'இரும்புத்திரை' பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் மூன்றாவது பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் விஷால் டி.வி, கம்ப்யூட்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குடோனிலிருந்து நடந்து வரும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா 'இரும்புத்திரை' படத்தின் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் இரும்புத்திரை படம் உருவாகிறது. திருமணத்திற்குப் பிறகு நடித்துவரும் சமந்தா, இந்தப் படத்தில் செம க்யூட்டாக இருக்கிறார். சேலை அணிந்து ஹோம்லி லுக்கில் வெளியான சமந்தாவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.
Vishal, Samantha starrer 'Irumbuthirai' is directed by PS Mithran. Vishal produces this film by Vishal Film Factory. The final shooting of the movie 'Irumbuthirai' is completed. The film's post production works are taking place. The film's release has been postponed to January 26 is said to be released to Pongal.