வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் நடித்திருக்கும் 'பார்ட்டி' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளில் நடிகை நிவேதா பெத்துராஜ் செம கிளாமராக நடித்திருக்கிறார். நிவேதா நடிக்கும் படுக்கையறை காட்சியும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. 'பார்ட்டி' டீசர் பார்த்த நிவேதா பெத்துராஜின் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் கிளாமர் என்ற விஷயத்தைத் தவிர்க்கவே முடியாது. முதல் இரண்டு படங்களில் ஹோம்லியாக நடித்தாலும் அவர்களை காலம் இந்த கிளாமர் உலகத்திற்குள் அழைத்துவந்து விடும். அந்த வகையில் மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ் 'ஒருநாள் கூத்து', 'பொதுவாக என் மனசு தங்கம்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது இவர் நடிப்பில் அடுத்து 'டிக் டிக் டிக்', 'பார்ட்டி' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.
இதில் 'பார்ட்டி' படத்தின் டீசரில் நிவேதா பெத்துராஜின் கிளாமர் காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். சில படங்களே நடித்திருந்தாலும், இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
'Party' movie teaser starring Jai, Mirchi Siva, Regina, Nivetha Pethuraj, Sathyaraj, Ramya Krishnan and Nasser in Venkatprabhu's direction released officially. Actress Nivetha Pethuraj has acted as very glamour in this film.