இந்தியா மற்றும் இலங்கை நடுவே ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் பாலம் இருப்பது உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்கு அமெரிக்க டிவி சேனல் விடையளித்துள்ளது. 'சயின்ஸ் சேனல்' இதுகுறித்த ஆய்வு ப்ரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராமர் சேது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ராமாயண இதிகாசத்தின்படி, இந்தியா-இலங்கை நடுவே கற்களால் பாலம் கட்டப்பட்டதாகவும், ராமர், தனது பரிவாரங்கள், வானர படையின் உதவியோடு பாலம் கட்டி இலங்கைக்கு போர் தொடுத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுதான் என்றும், ராமாணயத்தில் கூறப்படுவது கற்பனை என்றும் வாதிடுவோரும் உண்டு. இந்த நிலையில்தான் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு கடல் வழி திட்டம் கொண்டுவந்தது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நடுவேயான ராமர் பாலம் பகுதியிலுள்ள மணல் திட்டுகளை இடித்துவிட்டு அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், சேது சமுத்திர திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த எதிர்ப்பாக மட்டுமின்றி, சுற்றுச்சூழலியளாளர்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கடல் பிராந்தியத்தின் சுற்றுச்சூழலை இத்திட்டம் கெடுத்துவிடும் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், ராமாயணம் தொடர்பான வாத விவாதங்களே இந்த திட்டத்தில் அதிகம் எதிரொலித்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் சயின்ஸ் சேனல் வெளியிட்ட வீடியோவில், ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம், மனிதர்களால்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை அந்த வீடியயோ 10 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
Are the ancient Hindu myths of a land bridge connecting India and Sri Lanka true? Scientific analysis suggests they are