ஏர் டெக்கான் விமான சேவை மீண்டும் வந்தது... இனி 1 ரூபாயில் பறக்கலாம்!- வீடியோ

2017-12-13 4,092

கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருந்த ஏர் டெக்கான் விமானம் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விமான சேவை கடந்த 2012ம் ஆனது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறைந்த விலை பயண கட்டணம் நிர்ணயிக்கும் ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் ஒரு ரூபாயில் டிக்கெட் விற்க போவதாக அறிவித்து இருக்கிறது. இன்னும் சில முக்கியமான எதிர்கால திட்டங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்த விமான நிறுவனத்தை சில வருடங்களுக்கு முன்பு கிங் பிஷர் நிறுவனம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தனியாக செயல்பட இருக்கிறது ஏர் டெக்கான் நிறுவனம்.

இந்திய விமான சேவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஏர் டெக்கான். 2003 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி இந்த நிறுவனத்தின் சேவை தொடங்கப்பட்டது. பெங்களூரை சேர்ந்த ஜி.ஆர்.கோபிநாத் என்ற முன்னாள் ராணுவ கேப்டன் இந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 1 ரூபாய் டிக்கெட் என நிறைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் வேகமாக வளர்ந்து வந்தது.

இருப்பினும், ஏர் டெக்கான் விமான நிறுவனம் பல்வேறு காரணங்களால் திடீர் என்று நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக 2008ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை கிங் பிஷர் நிறுவனம் வாங்கியது. இதைத் தொடர்ந்து, ஏர் டெக்கான் நிறுவனத்தின் லோகோ மாற்றப்பட்டது. ஆனால் 2012ஆம் ஆண்டு இந்த விமான சேவை திடீர் என்று நிறுத்தப்பட்டது.




Air Deccan is back, will roll back again on sky on 22 December and fly to Mumbai from Nashik. Air Deccan, was the first Indian low-cost carrier. Headquartered in Bangalore, which stopped its service in 2008.

Videos similaires