செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் நடத்தியததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்து தாயை கொன்று விட்டு தப்பிய தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டான்.
விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட தஷ்வந்த், போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தாயை கொன்றது ஏன் என்றும், பணம் கொடுக்காவிட்டால் தந்தையை கொல்ல முடிவெடுத்ததாகவும் கூறினார். தனது கொலையை ஒப்புக்கொண்டதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொன்ற வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்து வந்துள்ளான்.