டிக்கெட் பரிசோதகரை போலீசார் தாக்கியதால் பதற்றம்..வீடியோ

2017-12-12 9

இருசக்கர வாகனத்தில் ஹல்மெட் அணியாமல் வந்த ரயில் டிக்கெட் பரிசோதகருக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் போலீசார் டிக்கெட் பரிசோதகரை தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் போலீசாருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் இடையே நள்ளிரவு ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு….

திருச்சியை சேர்ந்தவர் முத்துசாமி. ரயில்வே டிக்கெட் பரிசோதகராக உள்ளார். இவர் நேற்று தனது பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். ரயில்வே நிலையம் அருகிலேயே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துசாமியை பிடித்த போலீசார் அவரிடம் ஹல்மெட் அணியாதது குறித்து கேட்டுள்ளனர். அப்போது இருவக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியவே போலீசார் முத்துசாமியை சராமரியாக தாக்கியுள்ளனர். இதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்துள்ளார். முத்துசாமியை போலீசார் தாக்கியதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தாக்குதல் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுடன் ரயில்வே ஊழியர்களும் சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Des : The police have been injured in a ticketing inspector in a controversy between the train ticket inspector and the police who did not wear a hammet on a two-wheel

Videos similaires