தொழிலில் நஷ்டம் - குடிபோதையில் குடும்பத்தையே வெட்டி கொலை செய்த கொடூரன்- வீடியோ

2017-12-12 615

துணிக்கடை உரிமையாளர் தாய், மனைவி, இரண்டு குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பம்பல் கிருஷ்ணாநகரில் உள்ள ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கடையை மூடிவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாமோதரனுக்கும் அவரது மனைவி தீபாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட தீபாவை கண்மூடி தனமாக அடித்துள்ளார். தீபாவை அடிப்பதை கண்டு தாமோதரனின் தாய் சரஸ்வதி குழந்தைகள் மீனாட்சி, ரோஷன் ஆகியோர் தடுக்க முயன்றுள்ளனர். குடி போதை தலைக்கேறிய நிலையில் இருந்த தாமோதரன் ஒருகட்டத்தில் அருகில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி தீபா, மற்றும் குழந்தைகள், தாயை கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் நான்கு பேரும் இரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க உயிரிழந்துள்ளனர். சற்று நேரத்தில் தாமோதரனுக்கு குடிபோதை சற்று குறைந்துள்ளது. அப்போது அவர் பார்க்கையில் நான்கு பேரும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வதன்று தெரியாமல் வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது பிணமாக கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த தாமோதனை மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அரசு மருத்துவமனையில் தாமோதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பம்பல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Des: The incident happened in Chennai, where the mother, wife and two suicide victims committed suicide.

Videos similaires