மும்பையில் காதலருடன் ஊர் சுற்றும் கமல் மகள்!! விரைவில் திருமணம்?- வீடியோ

2017-12-12 4,456

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் மும்பையில் இரவில் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. தன்னுடைய காதலரான லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல்லைத் திருமணம் செய்துகொள்ள ஸ்ருதி ஹாசன் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்த ஸ்ருதி, அம்மா சரிகாவிடமும் அறிமுகப்படுத்தி பெர்மிஷன் வாங்கிவிட்டாராம்.
ஸ்ருதி ஹாசன் , இங்கிலாந்து நடிகர் மைக்கேல் கார்சேலை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. ஸ்ருதி ஹாசன், மைக்கேல் கால்சேலை கட்டித் தழுவியபடி இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.
கடந்த வாரம் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் - வினோதினி திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு வாழ்த்திய கமல்ஹாசனோடு, மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசனும், மைக்கேல் கார்சேல்லும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
மணமக்கள் கோலத்தில் பட்டுசேலை அணிந்து தலைநிறைய மல்லிகைப் பூவுடன் ஸ்ருதி ஹாசனும், அவருடைய காதலர் மைக்கேல் கார்சேல் பட்டு வேட்டி சட்டையிலும் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Kamal Haasan's daughter, Shruti Haasan with her boyfriend Michael corsale spotted at party hunters Mumbai at night. Recently In Adhav Kannadasan marriage, Shruti Hassan and Michael corsale were present with Kamal Haasan. Shruti Haasan is said to have decided to marry her lover, Michael corsale soon.

Videos similaires